

டாக்டர் படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் - டான்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசை - அனிருத்.
டாக்டர் படத்துக்குப் பிறகு இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் ப்ரியங்கா மோகன். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த் போன்றோரும் டான் படத்தில் நடித்துள்ளார்கள்.
டான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.