சந்தானம் நடிப்பில் உருவான ’சபாபதி’ டிரைலர் வெளியீடு

நடிகர் சந்தானம் நடித்து வெளியீட்டிற்குத் தயாராகி வரும் ‘சபாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
சந்தானம் நடிப்பில் உருவான ’சபாபதி’ டிரைலர் வெளியீடு
சந்தானம் நடிப்பில் உருவான ’சபாபதி’ டிரைலர் வெளியீடு
Updated on
1 min read

நடிகர் சந்தானம் நடித்து வெளியீட்டிற்குத் தயாராகி வரும் ‘சபாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

’டிக்கிலோனா’ திரைப்படத்திற்கு பின் வெளியாகும் சந்தானத்தின் ‘சபாபதி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வருகிறது. இப்படத்தில் திக்கு வாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தானத்துடன் குக் வித் கோமாளி புகழ் , பிரித்தி வெர்மா , எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீனிவாச ராவ் இயக்கும் இப்படத்தை ஆர்.கே எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். 

’சபாபதி’ திரைப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com