புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெற்றிப் பட இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்: வெளியான தகவல்

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் குறித்து தகவல் ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. 

News image
Updated On :24 நவம்பர் 2021, 6:44 am

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்தப் படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தேசிங் பெரியசாமி ஆகிய இருவரில் ஒருவர் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாண்டிராஜ் தற்போது சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.