வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

எஸ்பிபி பாடிய 'அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4இல் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

News image
எஸ்பிபி பாடிய 'அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4இல் வெளியீடு
Updated On :28 ஜனவரி 2024, 4:16 am

DIN

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். 

அண்ணாத்த எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.