புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலிருந்து 'செல்லம்மா' பாடல் விடியோ இதோ!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள டாக்டர் படத்தில் இருந்து செல்லம்மா பாடலின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. 

News image
Updated On :5 அக்டோபர் 2021, 6:11 am

DIN

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து செல்லம்மா பாடலின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.  சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் ஏற்கனவே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் பாடலின் கிளிம்ப்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. பாடல் குழந்தைகளைக் கவரும் வகையில் மிக வண்ணமயமாக படமாக்கப்பட்டுள்ளது. 

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த வினய் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, அர்ச்சனா, அருண் அலெக்சாண்டர், தீபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.