'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு கட்டித்தந்த புது வீடு திறப்பு

பரியேறும்பெருமாள் படத்தில் நடித்த கிராமியக் கலைஞருக்கு மாவட்ட நிர்வாகமும் தமுஎகசவும் சமூக ஆர்வலர்களுமாகப் புதிய வீட்டைக் கட்டித் தந்துள்ளனர்.
'பரியேறும் பெருமாள்' நடிகருக்கு கட்டித்தந்த புது வீடு திறப்பு

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த நாட்டுப்புறக் கலைஞர்   தங்கராஜுக்கு மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் சாா்பில் கட்டித் தரப்பட்ட புதிய வீட்டை  இயக்குநர் மாரி செல்வராஜ் திறந்துவைத்தார்.

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதி ஆதிக்கத்திற்கு எதிராக வெளியான இந்தத் திரைப்படம் வணிகரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

மேலும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்த கிராமியக் கலைஞரான தங்கராஜ் அனைவராலும் பாராட்டப் பெற்றார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் வசித்து வரும் தங்கராஜ், கடந்த 40 ஆண்டுகளாகக் தெருக்கூத்து கலைஞராக உள்ளாா்.

இவா் பாளையங்கோட்டை மாா்க்கெட் வாசலில் எலுமிச்சம் பழம் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் கரோனா தொற்றுக் காலத்தில் வியாபாரம் செய்ய முடியாமல் வாழ்க்கையை நடத்தவே சிரமப்பட்டு வந்தாா். அவரது வீடும் மழை காரணமாக இடிந்து விழுந்துவிட்டது.

இவரது வறுமை நிலையைப் போக்க திரைப்படக் குழுவினர் உதவ முன்வர வேண்டும் என பரவலாக குரல்கள் எழுந்து வந்தன.

இதுபற்றித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநில துணைச் செயலா் நாறும்பூநாதன், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மேற்கொண்ட நடவடிக்கையால் புதிய வீடு கட்டும் பணி தொடங்கியது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம், சமூக ஆா்வலா்கள் உதவியோடு புதிய வீடு கட்டிமுடிக்கப்பட்டது.

புதிய வீட்டின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. திரைப்பட இயக்குநா் மாரி செல்வராஜ் வீட்டைத் திறந்துவைத்தாா்.

விழாவில் முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநிலத் துணைச்செயலா் எழுத்தாளா் நாறும்பூநாதன், வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை) செல்வன், மயன்  தி.த.ரமேஷ்ராஜா, பாபு, துணை வட்டாட்சியா் மாரிராஜா உள்பட பலா்  பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com