பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. வெளியான முதல் 6 நாட்களில் ரூ.600 கோடி வசூலித்து சாதனைபடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'கேஜிஎஃப் 2' படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''கேஜிஎஃப் 2'வுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். யஷ் மிரட்டிவிட்டார். நடிகர் சஞ்சய் தத் தனது நடிப்பின் மூலம் காந்தம்போல ஈர்க்கிறார். சிறப்பான பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு.
இதையும் படிக்க | திடீரென சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த விஷ்ணு விஷால்
எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன். இது பிரஷாந்த் நீலின் பிரம்மாண்டமான படைப்பு. இவருடைய கற்பனைத் திறனுக்கும் படமாக்கும் விதத்துக்கும் எனது மரியாதை. சிறப்பான காட்சி அனுபத்துக்கும் இந்திய சினிமாவின் கொடி உயர பறக்க வைத்ததற்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்று அல்லு அர்ஜுன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


