நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் விஷ்ணு விஷால். தற்போது கட்ட குஸ்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் தெலுங்கில் மட்டி குஸ்தி என்ற பெயரில் உருவாகிறது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா தனது ஆர்டி டீம் வொர்க்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.
இந்தப் படத்தை செல்ல அய்யாவு இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் விடியோ போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தான் சமூக வலைதளங்களிலிரு்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''வாழ்க்கையில் அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்வது முக்கியம். சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Hello guys...
â VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) April 21, 2022
Takin a break is very important for life...
Taking a break from social media for sometime..
See u soon :)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


