மீண்டும் துருவ நட்சத்திரம் ? - விக்ரமுடன் கௌதம் மேனன்
இயக்குநர் கௌதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


இயக்குநர் கௌதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. சில காட்சிகள் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.
இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு மனம் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து. ஆனால் படம் மீண்டும் எப்பொழுது துவங்கும் என்பது தெரியாமல் இருந்தது.

இயக்குநர் கௌதம் மேனன் ஜோஷ்வா, வெந்து தணிந்தது காடு படங்களிலும், விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களிலும் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இயக்குநர் கௌதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் துருவ நட்சத்திரம் பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
விக்ரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவரைப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் இரண்டே நாட்களில் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் முன் தோன்றிய விக்ரம் வதந்திகளைப் பொய்யாக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...