புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வெளியானது விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' பட பாடல்

விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 10:31 am

DIN

விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

விஜய் தேவரகொண்டா தற்போது குத்துச் சண்டை விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட லைகர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்க, பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வருகிற 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ஆஃபாட் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு தனிஷ்க் பாச்சி இசையமைக்க, தமிழில் இந்தப் பாடலை தீபக் ப்ளூ மற்றும் ஹரி பிரியா பாடியுள்ளனர். சாகர் இந்தப் பாடலை எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.