ரஜினிகாந்துக்கு மனைவி லதா கொடுத்த பரிசு: மகள் செளந்தர்யா பகிர்ந்த தகவல்

ரஜினிகாந்துக்கு மனைவி லதா கொடுத்த பரிசு: மகள் செளந்தர்யா பகிர்ந்த தகவல்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிய ரஜினிகாந்த் திரைத் துறையில் பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். 
Published on


நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

நடிகர் ரஜினிகாந்தின் 47 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக அவரது வீட்டில் எளிமையான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் திரைக்கு வந்து 47 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக #47yearsofRajinism என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறிய ரஜினிகாந்த் திரைத் துறையில் பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார். 

இந்நிலையில், சினிமாவில் 47 ஆண்டுகள் நிறைவடைந்ததை மனைவி மற்றும் மகள்களுடன் மிக எளிமையாக ரஜினி கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்களை அவரின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். 

எங்களது அன்புக்குரிய ஜில்லும்மா... என்று தனது தாய் லதாவைக் குறிப்பிட்டுள்ள செளந்தர்யா, அப்பா ரஜினிகாந்துக்கு எப்போதுமே முதல் விசிறியாக அம்மாவே இருப்பதாகப் பதிவிட்டுள்ளார். மேலும், ரஜினிக்கு மனைவி லதா பூங்கொத்தை பரிசாக கொடுக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படங்களை ரசிகர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com