’ஷியாம் சிங்கா ராய்’ ஆஸ்கருக்கு பரிந்துரை!
நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நானி நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ’ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: விரைவில் வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ இரண்டாவது பாடல்
மறுபிறவி எடுக்கும் ஒரு எழுத்தாளனின் கதையாக உருவான இப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதுடன் நடனத்திலும் தனி முத்திரை பதித்திருந்தார்.
பெரிதும் கவனிக்கப்பட்ட இப்படம் தற்போது, சிறந்த காலகட்டத் திரைப்படம்(period film), சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்திற்கு மைக்கே ஜே.மேயர் இசையமைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...