திருச்சி: திரைப்பட நடிகர் விக்ரம் மற்றும் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், முன்னணி நடிகர்கள் நடிக்கும் கோப்ரா திரைப்படம் வருகிற 31ம் தேதி திரையில் வெளியிடப்பட உள்ளது.
இதனையொட்டி படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாட உள்ளனர்.
இதையும் படிக்க.. குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்த நடிகர் விக்ரம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்தனர், பயணிகள் உள்ளே செல்லும் பாதைக்கு ரசிகர்கள் ஓடி வந்தனர். அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவிக்க முற்பட்டனர்.
விமானநிலைய வருகை இடத்திலேயே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடியடி, மிதித்து விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து நடிகர் விக்ரம் கையசைத்தும், முத்தமிட்டபடியும் தனது வாழ்த்துகளையும், அன்பையும் பரிமாறினார். தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் பவுன்சர்களுடன் நடந்து சென்றபடி காரில் ஏறி விரைந்து சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


