இந்த வாரம் (டிச.9) வெளியாகும் தமிழ்ப் படங்கள்!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிச.9) வெளியாகும் தமிழ்ப் படங்களின் விவரங்கள்...
இந்த வாரம் (டிச.9) வெளியாகும் தமிழ்ப் படங்கள்!
Published on
Updated on
2 min read

டிஆர்.56:
பிரியாமணி நாயகியாக நடிக்கும் ‘டிஆர்.56’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார். ப்ரவீன் ரெட்டி கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆன்ந்த் லீலா இயக்கத்தில், நோபின்பால் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகுமென அறிவித்துள்ளனர். 

வரலாறு முக்கியம்:
ஆர்,பி. செளத்ரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் வரலாறு முக்கியம். 

இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 92-வது படம். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பிரக்யா நாகரா, விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா எனப் பலரும் நடித்துள்ளார்கள். சக்தி சரவணன் ஒளிப்பதிவு, இசை - ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான். 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

எஸ்டேட்:

டிவைன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வி. கார்த்திக் இயக்கத்தில் சுனைனா, ரம்யா நம்பீசன், கலையரசன், டேனியல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எஸ்டேட்’. இந்தப் படத்தில் குணா பால சுப்ரமணியன் இசையமைக்க அஸ்வந்த் ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ரத்தசாட்சி:(ஓடிடி)
ஜெயமோகனின் கதையை மையமாக வைத்து ‘ரத்தசாட்சி’ எனும் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

இப்படத்தை ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

விட்னஸ்:(ஓடிடி)
ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விட்னஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. புகைப்பட கலைஞர் தீபக் அவர்களின் முதல் படம் விட்னஸ். அவரே ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். முத்துவேல், ஜே.பி.சாணக்யா திரைக்கதை எழுதி உள்ளனர். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தினை  விஷ்வா பிரசாத்  தயாரித்துள்ளார்.

சமந்தாவின் ‘யசோதா’: (ஓடிடி)
ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. இப்படம் வருகிற டிச.9 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com