‘எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்’: ரஜினிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்’: ரஜினிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி தனது 72-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இன்று காலை முதலே ரஜினியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்தாக திரையரங்குகளில் புதுப்பொழிவுடன் பாபா மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்திலிருந்து முத்துவேல் பாண்டியன் என்ற ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ரஜினிக்கு ஹர்பஜன் சிங் தமிழில் பதிவிட்டு டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செப்பு மிங்கிளாகிவரும் தங்கம் அல்ல அவர்... எப்பவுமே சிங்கிளாகவரும் சிங்கம். சூப்பர் மனிதர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை. நீடூழி வாழ்க தலைவா எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ரஜினியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஹர்பஜன் சிங், தொடர்ந்து பல்வேறு தமிழ் டிவிட்டுகளை பதிவிட்டு தமிழக கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com