பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள பதான் படத்திலிருந்து ‘அழையா மழை’ என்ற தமிழ் பாடல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். இந்த படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது.
தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கிறது. யாஷ் ராஜ் தயாரிப்பின் 50வது படமென்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் ‘அழையா மழை’ என்ற பாடல் தமிழ், தெலுங்கும், ஹிந்தி மொழிகளில் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க| 72 வயதாகும் சூப்பர் ஸ்டார் பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்
இதுகுறித்து ஷாருக்கான் தமிழில் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “இது என் புதிய பேஷாரம் ரங் பாடல் தமிழில் அழையா மழை என்ற பெயரில். இப்ப பாருங்கள்! ஜனவரி 25, 2023 அன்று உங்களுக்கு அருகிலுள்ள பெரிய திரையில் மட்டுமே பதான் படத்தை கொண்டாடுங்கள். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அட்லி ஹாருக்கானை வைத்து எடுக்கும் ஜவான் படமும் இந்தி மற்றும் தமிழில் வெளியாவதால் பதான் படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இலக்கை எட்டுகிறது மகளிர் இடஒதுக்கீடு!

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

