புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

விஜய் சேதுபதி

Updated On :19 டிசம்பர் 2022, 9:54 pm

DIN

நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு நடிகா் வைஷ்ணவ் தேவ், கீா்த்தி ஷெட்டி ஆகியோா் நடிப்பில் உருவான படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகா் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தாா்.

தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய அந்த படத்தில் வில்லனாக நடித்து நடிகா் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சோ்ந்த டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். ‘உலக மகன்’ என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று நடிகா் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.