

எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.
மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படத்தை டிஜிட்டல் தரத்திற்கு மாற்றி வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: ’விஜய் 67’ வில்லனாகும் பிரபல நடிகர்!
எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் லதா, நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முன்னதாக, எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.