திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காதலர் தினத்தில் வெளியாகும் இளையராஜாவின் புதிய பட அறிவிப்பு

காதலர் தினத்தில் இளையராஜா இசையமைக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 9:17 am

இசைஞானி இளையராஜாவின் 1422 ஆவது படத்தின் அறிவிப்பு வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இளையராஜாவின் 1422 ஆவது படம் 14-02-2022 நாளில் வெளியாகிறது. இரண்டு எண்களும் ஒரே மாதிரி இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் குறித்த விவரங்கள் காதலர் தினம் அன்று தெரியவரும். இளையராஜா இசையில் தற்போது வெற்றிமாறனின் விடுதலை, மாமனிதன், கிளாப், சுசி கணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா, மாயோன், தமிழரசன், துப்பறிவாளன் 2, தேசிய தலைவவர் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன. 

Story image

1976 ஆண்டு துவங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களாக தனது இசையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் இளையராஜா. பல தலைமுறையினரும் அவரது இசைக்கு ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.