நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா?

நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு லண்டனில் திருமணம் நடைபெறவிருக்கிறது. 
நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு திருமணம்: மாப்பிள்ளை இவரா?
Updated on
1 min read

80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் ஸ்ரீபிரியா. ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார். பாபநாசம் படத்தின் தெலுங்கு பதிப்பான திரிஷ்யம் படத்தை ஸ்ரீபிரியா இயக்கினார். 

மேலும் சாந்தி முகூர்த்தம், நாகினி, நானே வருவேன், மாலினி 22 பாளையம்கோட்டை போன்ற தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இதயம் படத்தில் ஹீராவுக்கும் அலைபாயுதே படத்தில் ஜெயசுதாவுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் இவரது மகள் சினேகா லண்டனில் சட்டம் பயின்று அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் லண்டனில் பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரியும் அன்மோல் சர்மாவுக்கும் நாளை (பிப்ரவரி 6) திருமணம் நடைபெறவிருக்கிறது. பின்னர் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com