பிரபல சீரியல்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவர் அக்சயா பிரபா. ரோஜா, சித்தி 2, கோகுலத்தில் சீதை, ஈரமான ரோஜாவே, சத்யா, திருமதி ஹிட்லர், நினைத்தாலே இனிக்கும் என பெரும்பாலான தொடர்களின் நாயகிகளுக்கு இவர் தான் குரல் கொடுத்து வருகிறார்.
அந்தந்த கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப தனது குரலை மாற்றி பேசுவது இவரது பலம். சமூக வலைதளங்களில் இவரது குரலுக்காகவே ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டப்பிங் பேசும் அனுபவத்தை விடியோவாக பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தான் கோகுதலத்தில் சீதை தொடரில் முக்கிய காட்சி ஒன்றில் நாயகி ஆஷா கௌடாவிற்கு பின்னணி குரல் கொடுக்கும் விடியோவை பகிர்ந்துள்ளார். டப்பிங் என்பது கிட்டத்தட்ட நடிப்பு மாதிரிதான். காட்சியின் தன்மையை புரிந்துகொண்டு தன் குரலின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பாணியில் குரல் கொடுக்க வேண்டும். அதனை அக்சயா பிரபா சிறப்பாக செய்வதனால் தான் அவருக்கு வாய்ப்பு குவிந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


