
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் இடம் படித்தவர் நடிகர் விஜயகுமார். அண்ணன், அப்பா, தாத்தா என தனக்கு கிடைத்த கதாப்பாத்திரங்களை உண்மைக்கு நெருக்கமாக கையாள்வதில் வல்லவர்.
இந்த நிலையில் ஜி தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஊருல ரெண்டு ராஜகுமாரி தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்குகிறார். இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் நாட்டாமையாக நடிக்கிறார்.
இவர் ஏற்கனவே நாட்டாமை போன்ற படங்களில் நாட்டாமையாக நடித்துள்ளார். அவரது நடிப்பு ஒரு ஊருல ரெண்டு ராஜா தொடருக்கு கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது
சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட தொடர்களில் நடித்த விஜயகுமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி தொடரில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.