அக்ஷய் குமாரின் ‘பிரித்விராஜ்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் பிரமாண்டமான பொருள் செலவில் உருவான ‘பிரித்விராஜ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் பிரமாண்டமான பொருள் செலவில் உருவான ‘பிரித்விராஜ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சந்திர பிரகாஷ் திவேதி இயக்கத்தில் மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தில் அக்ஷய் குமாரும், அவருக்கு ஜோடியாக 2017 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற மனுஷி சிகில்லரும் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பெரும் பொருள் செலவில் உருவான இப்படம் திரையரங்குகளில் வரும் ஜுன் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்ஷய் குமார் தன் இன்ஸ்டா பக்கத்தில் ‘இது என் வாழ்நாளுக்கான கதாப்பாத்திரம்’ எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...