பிக்பாஸ் அல்டிமேட்டில் முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்த அபிராமி: மீண்டும் மலரும் காதல்?

பிக்பாஸ் அல்டிமேட்டில் நிரூப்புக்கு அபிராமி முத்தம் கொடுத்த விடியோ வைரலாகி வருகிறது. 
பிக்பாஸ் அல்டிமேட்டில் முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்த அபிராமி: மீண்டும் மலரும் காதல்?
Updated on
1 min read

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் காணும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் கலந்துகொள்வார்கள். 

தற்போது பாலாஜி முருகதாஸ், வனிதா, தாமரை, நிரூப், சுஜா வருணி, சினேகன், அபினய், அனிதா சம்பத், ஸ்ருதி, தாமரை செல்வி, சாரிக், ஜுலி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தானாகவே வெளியேறி அதிர்ச்சியளித்தார். 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அவருக்கு ஏஞ்சல் மற்றும் டிமோன் டாஸ்க் கொடுத்தார். போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். அபிராமியும் நிரூப்பும்முன்னாள் காதலர்கள் என்பதால், அபிராமி, நிரூப்புக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என தாமரை சொன்னார்.  

உடனடியாக அபிராமி நிரூப்பின் அருகில் சென்று முத்தம் கொடுத்தார். இதனையடுத்து இருவருக்கும் இடையே காதல் மலருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com