நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'காத்துவாக்குல ரெண்டு காதல்' - 3வது பாடல் 'நான் பிழை' இதோ..

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் மூன்றாவது பாடலான நான் பிழை இன்று மாலை 6 மணியளவில் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2022, 1:26 pm

DIN


'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் மூன்றாவது பாடலான 'நான் பிழை' இன்று (ஜன.3) மாலை 6 மணியளவில் வெளியானது.

பாடல் வெளியான சில மணிநேரங்களில் யூடியூபில் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இந்தக் கூட்டணியுடன் சமந்தாவும் இணைந்துள்ளார். ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.  இந்த படத்துல் ஏற்கெனவே 'ரெண்டு காதல்', 'டூ டு டூ' ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து 'நான் பிழை' என்ற மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் மீண்டும் ஒரு மெலோடியாக உருவாகியுள்ள இந்த பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுத, ரவி, ஷாஷா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.