பொங்கலுக்கு வலிமை வெளியீடு உறுதி: போனி கபூர் அறிவிப்பு

பொங்கல் வெளியீடாக வலிமை படம் ஜனவரி 13 அன்று வெளியாவதை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார்.
பொங்கலுக்கு வலிமை வெளியீடு உறுதி: போனி கபூர் அறிவிப்பு
Updated on
1 min read

பொங்கல் வெளியீடாக வலிமை படம் ஜனவரி 13 அன்று வெளியாவதை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார்.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி வலிமை படத்தில் மீண்டும் தொடர்கிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. அஜித், ஹுயூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். 

இந்தியாவில் கரோனாவின் 3-வது அலை காரணமாகப் புதிய கட்டுப்பாடுகளைப் பல்வேறு மாநிலங்களும் விதித்துள்ளன. தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜனவரி 13 அன்று வலிமை படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் வலிமை படம் ஜனவரி 13 அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனப் படத் தயாரிப்பாளர் போனி கபூர் இன்று அறிவித்துள்ளார். இதனால் வலிமை படம் பொங்கலுக்குத் திட்டமிட்டபடி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அதே தேதியில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com