
கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விக்ரம் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன், இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தானபாரதி இந்தப் படத்தில் நடிக்கிறாரா இல்லை, நட்பு ரீதியிலான சந்திப்பா என்பது விரைவில் தெரியவரும்.
இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.