காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பிரபல இயக்குநருடன் இணையும் பிக்பாஸ் ஷிவானி: பிரபலங்கள் வாழ்த்து

பிக்பாஸ் ஷிவானி தனது புதிய படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Published On :

விஜய் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் ஷிவானி நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல இயக்குநர் பொன் ராமுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இயக்குநர் பொன் ராமுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். புகைப்படத்தில் காவலர் உடையில் ஷிவானி இருக்கிறார். 

பொன்ராம் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் தான் ஷிவானி நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.