புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிக்பாஸ் சீசன் 5 முடிந்தது: வெற்றிவாகை சூடினார் ராஜு

பிக்பாஸ் சீசன் 5 போட்டியின் வெற்றியாளராக நடிகர் ராஜு அறிவிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :16 ஜனவரி 2022, 5:59 pm

DIN

பிக்பாஸ் சீசன் 5 போட்டியின் வெற்றியாளராக நடிகர் ராஜு அறிவிக்கப்பட்டுள்ளார். 

இறுதி போட்டியாளராக இருந்த ஐந்து பேரில் ராஜு, பிரியங்கா, பாவனி ஆகிய மூவர் மட்டுமே இறுதிபோட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 

இதில், ராஜு முதல் இடம் பிடித்து வெற்றியாளராகவும், பிரியங்கா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி விஜய் தொலைக்காட்சியில் இன்று (ஜன.16) மாலை தொடங்கியது. 

இரவு 11 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிக்பாஸ் சீசன் 5-ல் பாவனி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 

பிக்பாஸ் கோப்பையை வென்ற பிறகு மேடையில்  பேசிய ராஜு, நிகழ்ச்சி தயாரிப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் எனது பயணத்தைத் தொடங்கினேன். விஜய் தொலைக்காட்சின் விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு பல புரோமோக்களை தயாரித்துள்ளேன். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக எனக்கு புரோமோ தயாரித்திருந்தனர். நான் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். 

மேலும், நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்துகொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக உழைத்து இன்னும் இருட்டில் நின்றுகொண்டிருக்கும் தனது சக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை, ஊழியர்களை நினைவுகூர்ந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.