
டார்லிங், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சசிக்குமாருடன் இவர் நடித்த ராஜ வம்சம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ராம் பாலா இயக்கத்தில் சிவாவுடன் இணைந்து இடியட் என்ற படத்தில அவர் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் நிக்கி கல்ராணியின் வீட்டில் 19 வயதான தனுஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தன் வீட்டில் பணிபுரியும் தனுஷ் மீது கடந்த ஜனவரி 11 ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில் தனுஷ் தன் வீட்டில் இருந்து பைகளுடன் வெளியே சென்றுள்ளார். அவரை பிடிக்க முயன்றபோது நிக்கி கல்யாணியிடம் இருந்து தப்பி சென்றிருக்கிறார். இதனையடுத்து வீட்டில் சோதனையிட்டபோது, ரூ.40,000 மதிப்புடைய கேமரா மற்றும் அவரது சில உடைகளை தனுஷ் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 1, 20,000 இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | விண்வெளியில் இளையராஜா பாடல்? : முழு விவரம்
அவரது புகாரின் பேரில் விசாரித்தபோது தனுஷ் விருதாச்சலத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் கடந்த 5 மாதங்களாக நிக்கி கல்ராணியின் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தனுஷ் திருடியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தனுஷை திருப்பூரில் வைத்து திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து நாய்க்கு முடி திருத்தும் கருவி, மற்றும் சில உடைகளை கைப்பற்றியுள்ளனர். அவரிடம் விசாரித்தபோது கேமராவை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் விற்றுவிட்டு திருப்பூரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதனிடையே தனுஷ் ஆதரவாக செல்லதுரை என்பவர் சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் வீட்டில் திருடியதற்காக நிக்கி கல்ராணி, தனுஷை துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிக்கி கல்ராணியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.