/

இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா

இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2022, 6:29 am

DIN


இயக்குநர் செல்வராகவனுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றிய செல்வராகவனின் ட்விட்டர் பதிவு:

"காலை வணக்கம். எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (23/01/2022) உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2, 3 நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்."

துள்ளுவதோ இளமை மூலம் தமிழ்த் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை என தமிழில் மட்டும் 10 படங்களை இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.