பொன்னியின் செல்வனில் விக்ரம் இப்படித் தான் இருப்பாரு - வேற லெவல் போஸ்டர் வெளியானது
பொன்னியின் செல்வனின் படக்குழு நடிகர் விக்ரமின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.


பொன்னியின் செல்வனின் படக்குழு நடிகர் விக்ரமின் தோற்றப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
ராஜராஜ சோழன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கி வருகிறார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்த நிலையில் வருகிறார் சோழன் என சில நிமிடங்கள் கொண்ட ப்ரமோ விடியோ சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் தோற்றப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் கதைப்படி பட்டத்து இளவரசரான ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் விதமாக இறந்துவிடுவார். அவரது இறப்பு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும்.
பொன்னியின் செல்வனை படித்துவிட்டு ஆதித்ய கரிகாலனை எப்படி நாம் உருவகப்படுத்தியிருப்போமோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறார் விக்ரம். மற்ற நடிகர்களின் தோற்ற புகைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...