வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வெளியானது இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' முதல் பார்வை போஸ்டர்

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

News image
Updated On :6 ஜூலை 2022, 12:49 pm

DIN

பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

Story image

யாழி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 

உமா தேவி மற்றும் அறிவு இணைந்து இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுத, சாண்டி நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.