நயன்தாராவின் கையைப் பிடித்து வாழ்த்துசொன்ன ரஜினிகாந்த் - நெகிழ்ச்சியுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த படங்கள்

திருமணத்தின்போது நயன்தாராவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொன்ன படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
நயன்தாராவின் கையைப் பிடித்து வாழ்த்துசொன்ன ரஜினிகாந்த் - நெகிழ்ச்சியுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த படங்கள்
Updated on
2 min read

திருமணத்தின்போது நயன்தாராவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொன்ன படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்றது. திருமண நிகழ்வின்போது நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

திருமணத்துக்கு பிறகு திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா அங்கு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நயன்தாரா காலணி அணிந்திருந்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது. பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்க, ரசிகர்கள் சூழ்ந்துகொண்ட பரபரப்பில் காலணி அணிந்திருந்ததை கவனிக்கவில்லை என திருப்பதி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம் எழுதியிருந்தார். 

தற்போது இருவரும் தாய்லாந்திற்கு தேனிலவு சென்று திரும்பியுள்ளனர். இதனையடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொள்ளவிருக்கிறார். 

இந்த நிலையில் தனது திருமண நிகழ்வில் ரஜினிகாந்த்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். 

அவரது பதிவில், அன்புள்ள நடிகர் ரஜினிகாந்த்.. எங்களது திருமணத்தில் வாழ்த்தும் அவரது இருப்பும் நேர்மறை எண்ணத்தையும், நம்பிக்கையும் அளித்தது. என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஷாருக்கான், சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவியுடன் இருக்கும் படங்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com