பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள படத்தைப் பகிர்ந்த பிரபல நடிகர்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தள படத்தைப் பகிர்ந்த பிரபல நடிகர்

பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத் தளத்தில் ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்துள்ள ஜெயராமின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 
Published on

பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத் தளத்தில் ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்துள்ள ஜெயராமின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கியிருக்கிறார். இதில்
முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. 

இந்தப் படத்தின் டீசர் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பொன்னியின் செல்வனை படித்தவர்கள், தங்கள் மனதில் கற்பனை செய்துவைத்திருக்கும் கதாப்பாத்திரங்களின் தோற்றத்தையும், டீசரில் வரும் நடிகர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டு கருத்துதெரிவித்துவருகின்றனர். 

ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், ராஜ ராஜ சோழனாக நடித்துள்ள ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தி, நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடித்துள்ள திரிஷா ஆகியோரின் தோற்றப் புகைப்படங்கள் வெளியான நிலையில் மற்ற கதாப்பாத்திரங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிக்ரகளிடையே இருந்துவந்தது. 

பூங்குழலியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லெக்ஷமியின் தோற்றமும், ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்துள்ள ஜெயராமின் தோற்றமும் டீசர் மூலம் நமக்கு தெரியவந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்புத் தளத்தில் ஆழ்வார்கடியான் நம்பி தோற்றத்தில், இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் ஜெயராம் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆழ்வார்கடியான் நம்பி சோழ அரசின் முதல் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரின் ஒற்றன் ஆவார். மேலும் பழுவூர் இளையராணி நந்தினியை வளர்ப்பு சகோதரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com