கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நிகழ்ச்சிக்கு சமந்தாவை கையால் தூக்கி வந்த அக்ஷய் குமார் - வைரலாகும் விடியோ

நடிகை சமந்தாவை அக்ஷய் குமார் தூக்கி செல்லும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :19 ஜூலை 2022, 9:34 am

DIN

நடிகை சமந்தாவை அக்ஷய் குமார் தூக்கி செல்லும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விஜய் டிவியின் காபி வித் டிடி போல ஹிந்தியில் இயக்குநர் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இயக்குநர் கரணின் கேள்விகளுக்கு பதிலளிப்பர். 

காபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் சமந்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி வருகிற வியாழக்கிழமை ஒளிபரப்பாகவிரக்கிறது. 

Story image

இதனை முன்னிட்டு நிகழ்ச்சியின் முன்னோட்டம் வெளியானது. நிகழ்ச்சி அரங்குக்கு சமந்தாவும் அக்ஷய் குமாரும் நுழைகின்றனர். அப்போது சமந்தாவை அக்ஷய் குமார் தன் கையில் தூக்கிய படி அரங்குக்குள் நுழைகிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நிகழ்ச்சியில் மகிழ்ச்சியற்ற திருமணங்களுக்கு நீங்கள் தான் காரணம் என கரண் ஜோகரை சமந்தா குற்றம்சாட்ட, அவர் அதிர்ச்சியாகிறார். பின்னர் பேசும் சமந்தா, நீங்கள் கபி குஷி கபி கம் போன்ற படங்களில் மிகவும் அழகாக காட்டுகிறீர்கள்.  ஆனால் உண்மை கேஜிஎஃப் படம் போல இருக்கிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.