கத்ரீனா ஃகைப் மற்றும் விக்கி கௌசலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
சமூக வலைதளம் வாயிலாக கத்ரீனா மற்றும் விக்கி கௌசல் தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கதை செய்யப்பட்டுள்ளார்.
மும்பை சண்டாகிரஸ் காவல் நிலையத்தில் விக்கி கௌசல் மற்றும் கத்ரீனா ஆகியோர் மீது நபர் ஒருவர் சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் மன்விந்தர் சிங் என்பவரை அடையாளம் கண்டுள்ளனர். அவரை விசாரித்ததில் இவர் கத்ரீனாவின் ரசிகர் என்பது தெரியவந்துள்ளது.
இவர் இன்ஸ்டாகிராமில் கத்ரீனாவை பின்தொடர்ந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மன்விந்தர் சிங் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.