ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஷாருக்கான் - அட்லி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 9:54 am

DIN

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும்  ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். 

ஷாருக் கான் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பெயர் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், டீசர் குறித்த சென்சார் தகவலில் படத்தின் பெயர் ‘ஜவான்’ என தெரியவந்தது. 

தற்போது, ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஜுன் 2 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.