தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வெளியானது ‘சந்திரமுகி 2’ படத்தின் அறிவிப்பு போஸ்டர்

சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2022, 12:56 pm

DIN

சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்குவதாக முன்னர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.

மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.