அக்னிபத் திட்டத்துக்கு நேரடி ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர் - சர்சைக்குள்ளான பதிவு

அக்னிபத் திட்டத்துக்கு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜன் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 
அக்னிபத் திட்டத்துக்கு நேரடி ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர் - சர்சைக்குள்ளான பதிவு
Published on
Updated on
1 min read

அக்னிபத் திட்டத்துக்கு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நடராஜன் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

முப்படைகளுக்கு தற்காலிகமாக 4 ஆண்டுகள் மட்டும் பணயாற்றும் வகையில் அக்னிபத் என்ற திட்டத்துக்கான அறிவிப்பு வெளியானது. கடந்த 4 ஆண்டுகளு்கு மட்டும் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். 

மேலும் 4 ஆண்டு பணிக்கு பிறகு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் அக்னி வீரர்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை திரும்ப பெறக்கூறி வட இந்திய மாநிலங்களில் கடும் வன்முறைகள் வெடித்தன. நிறைய இடங்களில் ரயில்கள் எரிக்கப்பட்டன. இதன் காரணமாக நாடு முழுவதும் பதட்டமான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. 

இதனிடையே நொய்டாவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை காவலர்கள் கட்டுப்படுத்த முயன்றனர். இதில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் தாக்கியதில் ஓட்டுநர் உட்பட 8 காவலர்கள் படுகாயமடைந்தனர். 

இந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பானை தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன். தேசமே தெய்வம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com