பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் கைது
மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘ஹோம்’ ‘ஆடு’ ‘திருச்சூர் பூரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள விஜய் பாபு கடந்த சில வாரக்களுக்கு முன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தார் என துணை நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை அளித்தார்.
அவர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஒன்று பாலியல் வன்கொடுமை, இன்னொன்று அடையாளத்தை அழித்தல். பட வாய்ப்பை வழங்குவதாக கூறி துணை நடிகை ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியுள்ளார்.
எர்ணாக்குலம் தெற்கு காவல் நிலையத்தின் முன்பாக விஜய் பாபு கைது செய்யப்பட்டார். அவரு ஏற்கனவே கேரள உயர்நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளதால் விரைவிலே சிறையிலிருந்து வெளிவருவார் என தகவல் சொல்லப்படுகிறது.
அவரை விடுதலை செய்வதற்கு முன்பாக காவல்துறை குற்றம் நடந்த இடத்திலிருந்து தடயங்களை சேகரிக்க இருக்கிறது.
அம்மா அமைப்பினர் இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன தண்டனையை வழங்கினாலும் நாங்களும் வழிமொழிகிறோம். ஆனால் அதற்கு முன்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...