நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் யூத் பட ஆள்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில், 2வது மற்றும் 3வது போஸ்டர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இந்தப் படத்தில் தமன் இசையில் ஒரு பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். மேலும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பாடலாசிரியர் விவேக் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, சரத்குமார், ஷாம், குஷ்பு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் யூத் பட ஆள்தோட்ட பூபதி பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்தில் கில்லி பட கபடி கபடி பாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


