நடிகர் கவின் தற்போது அடுத்ததாக நடிக்கும் படம் பூஜையுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துவங்கியது. இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரிக்க, கணேஷ் கே பாபு இயக்குகிறார்.
இயக்குநர் கணேஷ் கே. பாபு 'தூங்கா நகரம்', 'கடாரம் கொண்டான்' படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் 4வது படமாகும்.

இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இந்தப் படம் தற்போதைய காலகட்ட காதலை சொல்லும் பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கிறதாம்.

இந்தப் படத்தில் வாழ் படத்தில் நாயகனாக நடித்த பிரதீப் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இவர் நடிகர் கவினின் நண்பர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினின் விருந்தினராக வந்து அவரை அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் நடிகர் கவின் தொடர்ந்து விஜய் பட நடிகைகளுடன் ஜோடி சேருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் பீஸ்ட் அபர்னாவுடன் இணைந்திருக்கும் கவின், முன்னதாக 'பிகில்' படத்தில் நடித்த அம்ரிதாவுடன் 'லிஃப்ட்' படத்திலும், அதே 'பிகில்' படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து 'ஆகாஷ் வாணி' இணையத்தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?

பிரசார களத்தில் சரியான போட்டி! தவெக பிரசார வாகனத்தை தெறிக்க விட்ட திலகபாமா!

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
கேரளத்தில் வாக்குப் பதிவு முடிந்து 3 நாள்களாகியும் தரவுகளை வெளியிடாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


