மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரஷாந்த்தின் 'அந்தகன்' படத்திலிருந்து என் காதல் பாடல் வெளியானது

பிரஷாந்த்தின் அந்தகன் படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் என் காதல் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2022, 1:09 pm

DIN

பிரஷாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள படம் அந்தகன். இந்தப் படம் ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தை இயக்குநரும், பிரஷாந்த்தின் அப்பாவுமான தியாகராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பிரஷாந்த்தின் ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக வெளியிடுகிறார். 

இந்தப் படத்தில் பிரஷாந்த்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா தாம்சன், மனோபாலா, பெசன்ட் ரவி, மோகன் வைத்தியா, லக்ஷ்மி பிரதீப், ரேகா சுரேஷ், செம்மலர், கவிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். கலா இந்தப் படத்துக்கு நடனம் அமைத்துள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து என் காதல் என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.