இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குலுகுலு: நடிகர் சந்தானத்துடன் இணையும் இயக்குநர் ரத்னகுமார்

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் குலுகுலு திரைப்படத்தின் போஸ்டர் புதன்கிழமை வெளியானது.

News image
நடிகர் சந்தானம் நடிக்கும் ’குலுகுலு’: போஸ்டர் வெளியீடு
Updated On :16 மார்ச் 2022, 12:50 pm

DIN

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் குலுகுலு திரைப்படத்தின் போஸ்டர் புதன்கிழமை வெளியானது.

மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார். நீண்ட இடைவெளிக்குப் பின் ரத்னகுமார் இயக்கியுள்ள படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். நாடோடி பயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் புதன்கிழமை வெளியானது. மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.