''இளையராஜாவின் மற்றொரு பக்கம்...'' - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த படம்

இளையராஜாவுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் தனது மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார். 
''இளையராஜாவின் மற்றொரு பக்கம்...'' - இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த படம்

ராக் வித் ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நாளை (மார்ச் 18) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடர்கள் கலந்துகொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடவிருக்கிறார்கள்.

விழா மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடவிருக்கிறார். இதனையடுத்து இந்தத் தகவலை தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்களுக்கு பகிர்ந்திருந்தார். அவரது பதிவில், ''கனவு நினைவானது. என் இசைக்கடவுளுடன் மேடையில் பாடவிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. அப்போது இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத், ''அன்பு மற்றும் பரிவு என இளையராஜாவின் இன்னொரு பக்கம். இந்தப் படம் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழக்கூடிய படமாக இருக்கும்'' என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 

இளையராஜாவின் மிகப் பெரிய ரசிகர்தான் தேவி ஸ்ரீ பிரசாத். தனது இசைக் கூடத்தில் இளையராஜாவின் படத்தை வைத்து அவருக்கு மரியாதை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com