''சீமானை சந்தித்து பேசியதே இல்லை'': சர்ச்சைக்கு சிவகார்த்திகேயன் பட இயக்குநர் விளக்கம்

சீமான் குறித்த சர்ச்சைக்கு சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குநர் ரவிகுமார் விளக்கமளித்துள்ளார். 
''சீமானை சந்தித்து பேசியதே இல்லை'': சர்ச்சைக்கு சிவகார்த்திகேயன் பட இயக்குநர் விளக்கம்
Updated on
1 min read

இன்று நேற்று நாளை, அயலான் படங்களின் இயக்குநரான ரவிகுமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசியபோது, அவருக்கு உரிய மரியாதை தரவில்லை என யூடியூப் பக்கத்தில் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இயக்குநர் ரவிகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், ''நான் சீமான் அவர்களை சந்தித்து பேசியதே இல்லை. அவருக்கு என்னை தெரியுமா என்று கூட தெரியாது.

ஆனால் நான் அவர் என்னிடம் பேசும்போது அலட்சியமாக நடந்துகொண்டதாக அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் யாரிடமும் அலட்சியமாக நடந்துகொள்பவன் அல்ல. 

நடக்காத சம்பவத்தை நீங்கள் நேரில் கண்டேன் என்று கூறுவது மிகப் பெரிய அவதூறு. ஆயிரக்கணக்கான மக்களுக்கு பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com