
சிவகார்த்திகேயனின் டாக்டர், அமலா பாலின் ஆடை, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் விஜய் கார்த்திக் கண்ணன். இவர் தற்போது ஒளிப்பதிவு செய்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் 'குளு குளு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் விஜய் கார்த்திக் கண்ணனுக்கும் ஒளிப்பதிவாளர் யாமினிக்கும் திருமணம் நடைபெற்றது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | 'நான் குழந்தையா இருக்கும்போது...'': சினேகா குறித்த சுவாரசியத் தகவலைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒரே துறையச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் யாமினி, சில்லுக்கருப்பட்டி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்துக்கும் முதலில் யாமினிதான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்திலிருந்து யாமினி விலகிவிட்டார்.