'வலிமை' படத்துக்கு பிறகு நடிகர் அஜித் குமார் தற்போது வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
ஏகே 61 படத்துக்காக நடிகர் அஜித்தின் தோற்றப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது. இதனை தற்போது லைக்கா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
''நடிகர் அஜித் குமாரின் ஏகே 62 படத்தை நாங்கள் தயாரிக்கவிருப்பதையும், விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதையும், அனிருத் இசையமைக்கவிருப்பதையும் பெருமையுடன் அறிவிக்கிறோம். இந்தப் படத்துக்கு ஜி.கே.எம்.தமிழ் குமரன் தலைமை தாங்குவார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கி, அடுத்த ஆண்டு வெளியாகும். இந்தப் படத்தின் பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி

ஆண்டிபட்டி: சகோதரா்களிடையே கடும் போட்டி

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்

ஆம்பூா் அருகே தபால் வாக்கை மாற்றி பெற்ற அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


