நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'போர்க்கண்ட சிங்கம்..' நாளை விக்ரம் படத்தின் மற்றொரு பாடல்

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் போர்க்கண்ட சிங்கம் என்ற பாடல் லிரிக் விடியோவாக நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. 

News image
Updated On :24 மே 2022, 3:43 pm

DIN

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் போர்க்கண்ட சிங்கம் என்ற பாடல் லிரிக் விடியோவாக நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. 

ஏற்கெனவே பத்தல பத்தல எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், நாளை மற்றொரு பாடலை படக்குழுவினர் வெளியிடுகின்றனர். 

Story image

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே படத்திற்கான புரமோஷன் பணிகளில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா (சிறப்புத் தோற்றம்) உள்ளிட்டோர் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.